மியன்மார்: கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான மோதல் நிறுத்தம்

மியன்மார்: கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான மோதல் நிறுத்தம்

1 mins read

நைப்பிடவ்: மியன்மாரின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தனது ராணுவ நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்துவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்திருக்கிறது. மியன்மார் அரசாங்கம் இதுவரை இத்தகைய ஒரு நடவடிக்கையை எடுத்ததில்லை என்றும் இதனால் மியன்மாரில் அமைதி முயற்சிகள் முன்னேற்றமடையக்கூடும் என்றும் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர். மியன்மாரின் அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூச்சி தலைமையிலான அமைதி முயற்சியில் பங்கேற்க இதுவரை 10 கிளர்ச்சிக் குழுக்கள் இணங்கியுள்ளன. ஆயினும் வேறு சில குழுக்கள் மறுத்துள்ளன.