ரஷ்யா: அணுவாயுத ஒப்பந்தம் ரத்து செய்யப் பட்டால் உலக அளவில் பூசல் ஏற்படலாம்

ரஷ்யா: அணுவாயுத ஒப்பந்தம் ரத்து செய்யப் பட்டால் உலக அளவில் பூசல் ஏற்படலாம்

1 mins read

மாஸ்கோ: பனிப்போர் காலத்தில் உருவாக்கப்பட்ட அணுவாயுத ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டால் உலக நாடுகளுக்கு இடையே ஆயுதப் போட்டித்தன்மையும் பூசலும் பெருகலாம் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. 1987ஆம் ஆண்டில் அமெரிக் காவும் அப்போதைய சோவியத் யூனியனும் கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கும் தீர்மா னத்தை ரஷ்யா முன்வைத்தி ருந்தது. ஐரோப்பாவில் அணுவாயுத ஏவுகணைகளைப் பாய்ச்சுவ தற்கான தளங்களை அமைக்க அமெரிக்காவையும் ரஷ்யாவையும் இந்த ஒப்பந்தம் தடை செய்கிறது. ஆனால் ஐக்கிய நாடுகள் அமைப்பு தனது தீர்மானத்திற்கு வாக் களிக்கத் தவறிவிட்டதாக ரஷ் யாவின் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது. உலகின் நிலைத்தன்மையையும் பாதுகாப்பையும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் இந்தச் செயல் பாதித்துள்ளதாகவும் இதனால் உலக நாடுகளுக்கு இடையே மறைமுகமாகவும் நேரடியாகவும் மோதல்கள் ஏற்படலாம் என்றும் ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.