வாஷிங்டன்: அமெரிக்கத் துருப்பு களை சிரியாவிலிருந்து வெளி யேற்ற அந்நாட்டின் அதிபர் டோனல்ட் டிரம்ப் எடுத்துள்ள முடிவை எதிர்த்து ஐஎஸ் கிளர்ச்சி அமைப்-புக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் அனைத்துலக கூட்டமைப்புக்கான அமெரிக்கா வின் சிறப்புத் தூதர் பிரெட் மெக்கர்க் பதவி விலகியுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. திரு மெக்கர்க், தமது பதவி விலகல் கடிதத்தை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோவிடம் நேற்று முன் தினம் சமர்ப்பித்ததாக அமெரிக்க வெளியுறவு அமைச்சு தெரிவித்தது. சிரியாவிலிருந்து கிட்டத்தட்ட 2,000 வீரர்களைக் கொண்ட அமெரிக்கப் படை மீட்கப்படும் என்று திரு டிரம்ப் கடந்த புதன் கிழமை திடீரென அறிவித்தார்.
தற்போதைய அமெரிக்க மத்திய வெளியுறவு கொள்கைக்குப் புறம்பாக கருதப்படும் இந்த நட வடிக்கையால் அமெரிக்காவின் நட்பு நாடுகள் அதிர்ச்சி அடைந்து உள்ளன. திரு டிரம்ப்பின் அறி விப்புக்கு ஒரு நாளுக்குப் பிறகு வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் மெட்டிஸ் பதவி விலகுவதாக அறிவித்தார். தமக்கும் திரு டிரம்ப்புக்கும் இடையே கொள்கை அளவில் வேறுபாடுகள் இருப்பதாக திரு மெட்டிஸ் தமது பதவி விலகல் கடிதத்தில் எழுதினார். திரு மெக்கர்க்கின் பதவிக் காலம் அடுத்தாண்டு பிப்ரவரியில் முடிகிறது. திரு மெட்டிசின் திடீர் பதவி விலகல் திரு மெக்கர்க்கின் முடிவுக்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்ற யூகங்கள் எழுந்துள்ளன.

