வாஷிங்டன்: அமெரிக்க குடியேறி களில் இந்த ஆண்டின் சிறந்த சுகாதார நிபுணருக்கான விருதை மலேசியாவைச் சேர்ந்த டாக்டர் ஜெயந்தி கந்தையா (படம்) வென்று இருக்கிறார். சிலாங்கூரில் பிறந்தவரான டாக்டர் ஜெயந்தி, இண்டியானா மாநிலத்திலுள்ள பால் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் ஊட்டச் சத்து, சுகாதார அறிவியல் துறையின் இடைக்காலத் தலைவராக இருந்து வருகிறார். கற்பித்தல் ஆய்வுப் பணிகளில் இவருடைய சாதனைகளைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது. "இந்த உயரிய விருதுக்கு நான் தேர்ந் தெடுக்கப்பட்டதை அறிந்து மிகுந்த வியப்புற்றேன். சக ஊழியர்கள் என் பெயரை இந்த விருதுக்குப் பரிந்துரை செய்தனர். "இதை மிகப் பெரிய கௌரவ மாகக் கருதுகிறேன்," என்று 30 ஆண்டுகளாக அமெரிக் காவில் பணிபுரியும் டாக்டர் ஜெயந்தி சொன்னார்.
அமெரிக்காவின் உயரிய விருது மலேசியருக்கு
1 mins read
-

