கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தை

கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தை

1 mins read

கோலாலம்பூர்: மலேசியாவில் தாமான் கெராமாட்டின் சுராவ்வில் பிறந்த சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை கை விடப்பட்டது. பெட்டியில் வைக்கப் பட்ட குழந்தையை அதிகாரிகள் மீட்டு அம்பாங் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது. இதையடுத்து குழந்தை ஆரோக்கியமாக இருப் பதாக அதிகாரிகள் அறிவித் தனர். இதற்கிடையே சம்பவம் தொடர்பில் பேசிய அம்பாங் மாவட்ட போலிஸ் தலைவரான உதவி ஆணையர் ஹம்சா அலி யாஸ், குழந்தையைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் காவல் நிலையத்துடன் உடனே தொடர்பு கொள்ள வேண்டும் என்றார்.