நவாஸ் ஷெரீஃப்புக்கு ஏழு ஆண்டு சிறைத்தண்டனை

நவாஸ் ஷெரீஃப்புக்கு ஏழு ஆண்டு சிறைத்தண்டனை

1 mins read

இஸ்லாமாபாத்: வருமானத் துக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் எண்ணத்தோடு லண்டன் 'அவென்பீல்ட்' கட்டடத்தை வாங்கிய ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் சப்தர் ஆகியோருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேல் முறையீட்டில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதற் கிடையே மற்றொரு நிலவரத் தில் பிளாக்‌ஷிப் முதலீட்டு ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப் விடுவிக்கப்பட்டார். ஆனால் இரும்பு ஆலை ஊழல் வழக்கில் அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.