மலேசிய கோயில் கலவரம்; மேலும் அறுவர் மீது குற்றச்சாட்டு

மலேசிய கோயில் கலவரம்; மேலும் அறுவர் மீது குற்றச்சாட்டு

1 mins read
f0a258fa-7623-420f-a8e6-70c80ac87a5a
-

பெட்டாலிங் ஜெயா: சிலாங்கூர் சுபாங் ஜெயாவில் உள்ள சீஃபீல்ட் ஸ்ரீ மஹா மாரியம்மன் கோயில் கலவரம் தொடர்பில் மலேசிய இந்தியர் சங்கத்தின் தலைவர் உட்பட மேலும் ஆறு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 24ஆம் தேதி நடைபெற்ற கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுடன் இவர்களும் சேர்த்து மொத்தம் 24 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. நீதபதி முஹமட் இக்வான் முகமட் நஸிர் முன்னிலையில் ஆறு பேர் மீது தனித்தனியாக குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது. ஆனால் எம். மணிமாறன், 38 உட்பட அறுவரும் தாங்கள் குற்ற வாளி அல்ல என்று கூறினர்.

மணிமாறன் மீது மட்டும் மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டன என்று த ஸ்டார் இணையம் குறிப்பிட்டது. அரசாங்க அதிகாரியை கடமை யைச் செய்யவிடாமல் தடுத்தது, கலவரம், காயத்தை ஏற்படுத்திய தாக அவர் மீது குற்றம் சாட்டப் பட்டுள்ளது. முஹமட் ஷஹ்ரி டேனியல் சாஜெல், 22, முஹமட் சைஃபுல்லா அப்துல்லா, 31, முஹமட் ஹஸ்நீசம் ஷ சம்சுதீன், 29, அக்மால் இஸாட் அசிஸ், 24, முஹமட் நூருல் இஸ்மாவி இஸ்லாஹுடின், 40 ஆகியோர் மற்ற ஐவர். இவர்கள் மீது கலவரத்தில் ஆயுதங்களை வைத்திருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. திரு மணி மாறன், 18,000 ரிங்கிட் பிணையில் விடுவிக்க அனுமதி வழங்கப் பட்டுள்ளது. மற்றவர்களுக்கு 5,000 முதல் 6,000 ரிங்கிட் பிணையில் விடுவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.