டிரம்ப்புக்கு எரிச்சல்; மேட்டிசை முன்பே அனுப்பத் திட்டம்

2 mins read
e4f48404-a8e4-4f71-982f-21a796725dda
-

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கும் தற்காப்பு அமைச்சர் ஜிம் மேட்டிசுக்கும் வெளியுறவுக் கொள்கைகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சிரியாவிலிருந்தும் ஆப்கானிஸ்தானிலிருந்தும் அமெரிக்கப் படைகளை மீட்டுக் கொள்ள வேண்டும் என்று அதிபர் டிரம்ப் விரும்புகிறார். ஆனால் இதனை ஜிம் மேட்டிஸ் எதிர்க்கிறார். இதன் தொடர்பில் அதிபர் டிரம்ப்பை சந்தித்து அவரது எண்ணத்தை மாற்றும் முயற்சியில் ஜிம் மேட்டிஸ் ஈடுபட்டார். இதில் ஜிம் மேட்டிசுக்கு தோல்வியே ஏற்பட்டது. அதோடு அவரது ஆலோசனைகளை செவிமடுக் கவும் அதிபர் டிரம்ப் மறுத்துவிட்ட தாகக் கூறப்படுகிறது. இதனால் ஜிம் மேட்டிஸ், பதவி விலகுவதாக அறிவித்தார். இதற்கிடையே ஜிம் மேட்டிசின் பதவி விலகல் உலக நாடுகளி டையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அமெரிக்க தளபதிகள், முக்கிய உதவியாளர்கள் ஆகியோர்களின் ஆலோசனைகளையும் மீறி சிரியா, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை மீட்டுக் கொள்ளும் அதிபரின் முடிவால் அவரது குடியரசுக் கட்சியினரும் அதிருப்தி அடைந்தனர். ஜனநாயகக் கட்சியினரும் ஜிம் மேட்டிசின் பதவி விலகலால் கவலையடைந்துள்ளனர். இதற்கிடையே ஜிம் மேட்டிஸ் அதிரடியாக பதவி விலகியது அதிபர் டிரம்ப்புக்கு எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருக் கிறது. இதனால் இரண்டு மாதங் களுக்கு முன்னதாகவே ஜிம் மேட் டிசை வீட்டுக்கு அனுப்ப அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார். இதையொட்டி தற்காப்பு அமைச்சர் பதவிக்கு புதியவர் ஒருவரை நியமிக்கும் அறிவிப்பை அதிபர் டிரம்ப் விரைவில் வெளி யிடுவார் என்று எதிர்பார்க்கப்படு கிறது. மற்றொரு நிலவரத்தில் சிரியா விலிருந்து அமெரிக்க ராணுவத்தை விலக்கிக்கொள்ளும் உத்தரவில் சிரியா கையெழுத்திட்டுள்ளது. அமெரிக்க ராணுவ பேச்சாளர் ஒருவர் இந்த விவரத்தைத் தெரிவித்தார். ஆனால் மேல் விவரங்களை அவர் வெளியிடவில்லை.