எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட சுனாமியால் பெரும் உயிரிழப்பையும் சேதத்தையும் எதிர் கொண்ட இந்தோனீசியாவின் பன்டென் மாநிலத்தில் மழை கொட்டித் தீர்ப்பதால் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கடலோர கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் சுனாமி ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர். சுண்டா நீரிணைப் பகுதியில் உள்ள அனாக் கிரக்காத்தோ எரிமலை கடந்த சனிக்கிழமை திடீரென வெடித்தது. இதனால் கடலடியில் நில அடுக்குகள் நகர்ந்து, சுனாமி ஏற்பட்டது. கிட்டத்தட்ட மூன்று மீட்டர் உய ரத்திற்கு அலைகள் எழுந்ததாகக் கூறப்பட் டது. இப்பேரிடரில் மாண்டோர் எண்ணிக்கை 429ஆக உயர்ந்துள்ளது; 1,485 பேர் காயம் அடைந்தனர்; 150 பேரைக் காணவில்லை.
இந்த நிலையில், அனாக் கிரக்காத்தோ எரிமலை நேற்று முன்தினம் மீண்டும் குமுறியதால் கடலோரப் பகுதிகளில் வசிக் கும் மக்கள் அங்கிருந்து வெளியேறி, மேடான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். கிட்டத்தட்ட 2.40 மணியளவில் பெரும் வெடிச் சத்தத்தைத் தாங்கள் கேட்டதாக அவர்கள் கூறினர். சுண்டா நீரிணையைச் சுற்றியுள்ள பகுதி களில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்கு மாறு இந்தோனீசிய வானிலை, பருவநிலை, நிலஇயற்பியல் அமைப்பின் தலைவரான திவி கொரிட்டா கர்னாவதி அறிவுறுத்தியுள்ளார். மோசமான வானிலை, உயரமான அலை களோடு எரிமலையும் குமுறி வருவதால் மீண்டும் ஒரு சுனாமி ஏற்படும் சாத்தியமுள்ள தாக அவர் எச்சரித்துள்ளார்.
செபிசி தீவில் இருந்து மீட்கப்பட்டு, படகு மூலம் பக்கோஹெனி துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்ட மூதாட்டியை நிவாரண முகாமிற்குக் கொண்டு செல்கின்றனர். படம்: இபிஏ

