பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பத்துப் பேர் பிடிபட்டனர்

பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பத்துப் பேர் பிடிபட்டனர்

1 mins read

ஐஎஸ்ஐஎஸ் போன்ற பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த பத்துப் பேர் இந்தியத் தலைநகர் டெல்லியிலும் உத்தரப் பிரதேச மாநிலத்திலும் கைது செய்யப்பட்டனர். 'ஹர்கத் உல் ஹர்ப் இ இஸ்லாம்' எனும் பெயரில் ஒரு பயங்கரவாத அமைப்பு உருவாக்கப் பட்டுள்ளதாக தேசிய புலனாய்வுப் பிரிவுக்கு ரகசியத் தகவல் கிடைத் தது. இதையடுத்து, புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் உத்தரப் பிரதேச பயங்கரவாதத் தடுப்புப் படையினரும் சேர்ந்து டெல்லி, உத்தரப் பிரதேசத்தில் 17 இடங் களில் அதிரடி சோதனை மேற் கொண்டனர்.

அச்சோதனைகளில் பத்துப் பேர் கைது செய்யப்பட்டதைப் பயங்கரவாதத் தடுப்புப் படையின் தலைமை அதிகாரி ஆசிம் ஆரூண் உறுதி செய்தார். அம்ரோஹாவில் உள்ள ஒரு மதரசாவில் ஒருவர் பிடிபட்டதாகவும் மற்ற நால்வரும் வேறு இடங்களில் கைது செய்யப் பட்டதாகவும் அவர் சொன்னார். டெல்லியில் ஐவர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து ராக்கெட் செலுத்தி உட்பட பெருமளவிலான ஆயுதங்களும் வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன. அத்துடன், ரூ.7.5 லட்சம் ரொக்கம், கிட்டத் தட்ட 100 கைபேசிகள், 135 சிம் அட்டைகள், மடிக்கணினிகள் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டன.