சிட்னி: அண்மையில் கட்டி முடிக்கப்பட்ட 38 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பான 'ஓபல் டவரி'ல் கிறிஸ்மஸ் தினத்துக்கு முந்திய நாள் விரிசல் ஏற்படும் சத்தம் ஏற்பட்டதை அடுத்து அந்தக் கட்டடத்தின் குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர். சிட்னி ஒலிம்பிக் பார்க்கில் அமைந்துள்ள கட்டடத்தை பொறியாளர்கள் பார்வையிட்டு பிரச்சினையைச் சரி செய்வதற்காக அங்கு வசிப் போர், அருகில் உள்ள கட்டடங் களில் வசிப்போர் என சுமார் 300 பேர் நேற்று மீண்டும் வெளி யேற்றப்பட்டனர். 'ஓபல் டவர்' கட்டடத்தின் 10வது மாடியில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாகவும் கட்டடம் ஓரிரண்டு மில்லிமீட்டர் கள் நகர்ந்திருப்பதாகவும் கூறப் பட்டது. கட்டடத்தின் ஒரு பகுதி வசிப்பதற்குப் பாதுகாப்பானது என்று கூறப்பட்டாலும் அங்கு வசிக்க மக்கள் தயக்கம் காட்டியுள்ளனர்.
ஓபல் டவர் விரிசல்; வசிப்போர் மீண்டும் வெளியேற்றம்
1 mins read
-

