ஈராக்கில் அமெரிக்க வீரர்களைச் சந்தித்த டிரம்ப்

ஈராக்கில் அமெரிக்க வீரர்களைச் சந்தித்த டிரம்ப்

2 mins read
1128216f-b856-463c-8692-8d375df32263
-

ஈராக்கில் உள்ள அல் அசாத் விமானத் தளத்தில் அதிபர் டிரம்ப், அவரது துணைவியார் மெலானியா டிரம்ப் ஆகியோருடன் அமெரிக்க வீரர்கள் அளவளாவி மகிழ்ந்ததுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர். படம்: ராய்ட்டர்ஸ்

பாக்தாத்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஈராக்கின் அல் அசாத் விமானத் தளத்தில் உள்ள அமெரிக்க வீரர்களை முன்னறி விப்பு ஏதுமின்றி நேற்று முன்தினம் சந்தித்தார். அப்போது, சிரியாவில் ஐஎஸ் படைகள் கிட்டத்தட்ட தோற்கடிக்கப்பட்டு உள்ளதாகவும் அதனால் அங்கிருக்கும் அமெ ரிக்க வீரர்களைத் தாயகத்துக்குத் திருப்பி அழைத்துக்கொள்ள இருப்பதாகவும் முன்னதாக அவர் குறிப்பிட்டதை அதிபர் டிரம்ப் தற்காத்துப் பேசினார். அதிபராக சர்ச்சைக்குரிய அந்தப் பகுதியை திரு டிரம்ப் பார்வையிடுவது இதுவே முதல் முறை. மத்திய கிழக்கு, மத்திய ஆசியா ஆகிய பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளுக்காக அனுப்பப்பட்டிருக்கும் வீரர்களைச் சந்திக்குமாறு பல மாதங்களாக பல கோரிக்கைகள் வைக்கப் பட்டதை அடுத்து வா‌ஷிங்டன் னிலிருந்து ரகசிய விமானம் மூலம் மேற்கு பாக்தாத்தில் இருக்கும் அமெரிக்க-ஈராக்கிய கூட்டு படைத் தளத்திற்கு திரு டிரம்ப் சென்றார்.

அப்போது அவரது துணைவியார் மெலானியா டிரம்பும் அவருடனிருந்தார். தனது நிர்வாக நிபுணர்கள் ஆட்சேபித்தபோதும் வெளிநாட்டுப் போர்க்களங்களில் இருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதில் கடப்பாடு கொண்டிருப்பதாக அவர் எச்ச ரிக்கை விடுத்தார். "உலக நாடுகளுக்கு அமெ ரிக்கா காவலாகத் தொடர்ந்து இருக்க முடியாது. அனைத்து சுமைகளையும் அமெரிக்காவின் மீது சுமத்துவது முறையல்ல," என்று வீரர்களுக்கிடையிலான உரையில் திரு டிரம்ப் கூறினார். ஆயினும், ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகளை மீட்டுக் கொள்ளும் எண்ணம் இல்லை என்றும் ஈரானை எதிர்க்க அது தளமாகப் பயன்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். தேவைப் பட்டால், சிரியாவுக்குள் மீண்டும் செல்லவும் அது வசதியாக இருக்கும் என்றார் அவர்.