மணிலா: பிலிப்பீன்சில் மணிலாவின் நினோய் அகினோ அனைத்துலக விமான நிலையத்தின் பாதுகாப்பு அனைத்துலகத் தரத்தில் இல்லை என்பதைக் குறிப்பிட்டு அங்கு செல்லும் தனது குடிமக்களை கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஒருகாலத்தில் உலகின் ஆக மோசமான விமான நிலையம் என்று குறிப்பிடப்பட்ட நினோய் அகினோ அனைத்துலக விமான நிலையம் வெளிநாட்டவர் பிலிப்பீன்சுக்குச் செல்வதற்கான அந்நாட்டின் முதன்மை விமான நிலையமாகும். இதற்கிடையே, மணிலா அனைத்துலக விமான நிலைய பொது மேலாளார் எட் மோர்ரியல், மணிலா விமான நிலையம் மிக மிக பாதுகாப்பானது என்றும் அனைத்துலகத் தரத்தை எட்டத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
'மணிலா விமான நிலையப் பாதுகாப்பு அனைத்துலகத் தரத்தில் இல்லை'
1 mins read
-

