ஜகார்த்தா: அனாக் கிரக்காத்தோ எரிமலையின் சீற்றம் அதிகரித்தி ருப்பதால் அதன் அபாயநிலை ஆக மோசமான நிலைக்கு அடுத்தபடிக்கு உயர்த்தப்பட்டு உள்ளது. கடந்த வாரம் ஆழிப் பேரலையால் பாதிப்புக்குள்ளான சுண்டா நீரிணைப் பகுதியை ஒட்டியுள்ள கடலோரப் பகுதிகளில் மற்றொரு இயற்கைப் பேரிடர் ஏற்படக்கூடுமோ என்ற அச்சம் அதிகரித்திருப்பதையடுத்து, எரி மலையைச் சுற்றியுள்ள அண்டக் கூடாத பகுதி விரிவுபடுத் தப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நான்கு நிலை அளவுகோலில் அனாக் கிரக்காத்தோவின் சீற்றம் தொடர்பான எச்சரிக்கையை தேசிய புவியியல் முகவை மூன் றாவது நிலைக்கு உயர்த்தியுள்ளது. நான்காவது நிலை ஆக மோச மானதாகும். "சிவப்பு அபாய எச்சரிக்கை, கிரக்காத்தோ எரிமலையின் சாம் பல் ஆகியவை காரணமாக அனைத்து விமானங்களும் மாற் றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டு உள்ளன," என்று இந்தோனீசிய விமானக் கட்டுப்பாட்டு முகவை யான 'ஏர்நாவ்' குறிப்பிட்டுள்ளது.
சீற்றத்தை அதிகரித்த அனாக் கிரக்காத்தோ எரிமலை சுமார் 3,000 மீட்டர் உயரம் வரை சாம்பலைக் கக்கியது. படம்: ஏஎஃப்பி

