21 விரைவுச்சாலைகளில் 2019ல் வரி உயர்வு இல்லை

21 விரைவுச்சாலைகளில் 2019ல் வரி உயர்வு இல்லை

1 mins read
d4d08709-ef52-4eed-b733-abcda4ffc336
-

புத்ராஜெயா: அனைத்து வாகனங் களுக்கும் மலேசியாவில் உள்ள 21 விரைவுச்சாலைகளில் சாலை வரியை உயர்த்த வேண்டாமென இம்மாதம் 12ஆம் தேதி மலேசிய அமைச்சரவை முடிவுசெய்துள்ள தாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 21 விரைவுச்சாலைகள் அடுத்த ஆண்டு சாலை வரி உயர்வுக்குத் தகுதிபெற்றவை என்றும் கூறப்பட்டது. நாட்டுக்குள் இருக்கும் விரை வுச்சாலைகளில் சாலை வரிகள் உயர்த்தப்படமாட்டா என்று கடந்த நவம்பர் மாதம் இரண்டாம் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந் ததை நிதியமைச்சர் லிம் குவான் எங் சுட்டிக்காட்டினார்.

எட்டு விரைவுச்சாலைகளில் பேருந்துகளுக்கும் பினாங்குப் பாலங்கள், ஜோகூரில் இருக்கும் இரண்டாவது இணைப்புச் சாலை ஆகியவற்றில் மோட்டார் சைக்கிள்களுக்கும் சாலை வரி அடுத்த ஆண்டு உயராது என்றும் இது அரசாங்கத்துக்கு 994.43 மில்லியன் மலேசிய ரிங்கிட் இழப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார். மலேசியாவில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினத்தால் ஏற்படும் சிரமத்தைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக திரு லிம் குறிப்பிட்டார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் சிறந்த வழிமுறை களை அரசாங்கம் தற்போது ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.