பெட்டாலிங் ஜெயா: மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் சி. சிவராஜ் அடுத்த ஐந்தாண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாது என்று மலேசியாவின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் அவர் வாக்களிக்கவும் முடியாது. ஆணையம் செய்துள்ள அறிவிப்பின் காரணமாக எதிர்வரும் கேமரன் மலை இடைத்தேர்தலில் சிவராஜ் போட்டியிட முடியாது. நடந்து முடிந்த பொதுத் தேர்தலுக்கு முன்பு சிவராஜ் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் லஞ்சம் கொடுக்கப்பட்டது உண்மைதான் என்று உறுதி செய்தது.
வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்த குற்றத்துக்காக தேர்தலில் போட்டியிட சிவராஜுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. படம்: இணையம்

