வாஷிங்டன்: அமெரிக்க நாடாளு மன்றத்தின் செனட் சபை, பிரதி நிதிகள் சபை ஆகியவை சிங்கப்பூர் நேரப்படி நேற்று காலை சிறிது நேரம் மட்டுமே கூடின. அதிலும் அரசாங்க முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசாங்க முடக்கத்தால் ஏற் பட்டுள்ள பாதிப்பைச் சரிசெய்யவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சி செய்யாதது அந்நாட்டு மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி உள்ளது. அரசாங்க முடக்கம் அடுத்த மாதம் வரை தொடரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மெக்சிகோவுடனான அமெ ரிக்க எல்லைப் பகுதியில் சுவர் எழுப்புவதற்குத் தாம் கோரியுள்ள 5 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி கிடைக்கும் வரை அரசாங்க முடக்கம் தொடரும் என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சூளுரைத்திருந்தார். சுவர் எழுப்புவதற்கு ஜன நாயகக் கட்சியினரும் டிரம்ப்பின் குடியரசுக் கட்சியினர்களில் சிலரும் எதிர்ப்பு தெரிவிக் கின்றனர். இவ்வாண்டில் மூன்றா வது முறையாக அமெரிக்க அரசாங்கம் முடங்கியுள்ளது. கடந்த இரண்டு முறை நிகழ்ந்த அரசாங்க முடக்கம் குறுகிய காலகட்டத்துக்கு நீடித்தது. 2018-12-29 06:10:00 +0800
அமெரிக்க அரசாங்க முடக்கம் அடுத்த மாதம் வரை தொடரக்கூடும்
1 mins read
-