லெஸ்டர் வெடிப்பு: மூவர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு

லெஸ்டர் வெடிப்பு: மூவர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு

1 mins read
f5a9cb65-9294-46c9-82eb-c2294c81f50e
-

லெஸ்டர்: இங்கிலாந்தின் லெஸ்டர் வட்டாரத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவத்தில் ஐந்து பேர் மாண்டனர். வெடிப்புக்கும் அதனால் ஏற்பட்ட மரணங்களுக்கும் மூன்று ஆடவர்கள் காரணம் என்று நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அராம் கர்ட், ஹவ்கார் ஹசன், அர்கான் அலி ஆகிய மூவரும் காப்புறுதி நிறுவனத்தை ஏமாற்றி 300,000 பவுண்ட் பறிக்க திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. அதற்காக அவர்கள் கடையின் கீழ்த் தளத்தில் பெட்ரோல் ஊற்றி தீவைத்தனர். அதன் விளைவாக ஏற்பட்ட வெடிப்பில் கடையில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒருவர் மாண்டார். இரண்டாவது மாடியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் பெண் ஒருவரும் வெடிப்பின் காரணமாக உயிரிழந் தனர்.