ஜகார்த்தா: இந்தோனீசியாவை அண்மையில் உலுக்கிய சுனாமியால் ஏறத்தாழ 40,000 பேர் தங்கள் வீடுகளை இழந்து குடியிருக்க இடமின்றி தவிப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 7,000க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. சுனாமி தாக்கியதில் 426 பேர் மாண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு முன்பு 430 பேர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தோனீசியாவின் மேற்கு பாப்புவாவில் நேற்று 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனீசியாவில் 40,000 பேர் வீடுகள் இழந்து தவிப்பு
1 mins read
-

