அமெரிக்கர்கள் அதிகம் விரும்பும் பெண்மணி மிஷேல் ஒபாமா

அமெரிக்கர்கள் அதிகம் விரும்பும் பெண்மணி மிஷேல் ஒபாமா

1 mins read
dc9da8d6-1718-43bd-b78e-2f4bfca45190
-

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிஷேல் ஒபாமாவைத்தான் அமெரிக்கர்கள் அதிகம் விரும்புகின்றனர். கடந்த 17 ஆண்டுகளாக அமெரிக்கர்கள் அதிகம் விரும்பும் பெண்மணியாக ஹில்லரி கிளின்டன் இருந்தார். அந்த இடத்தைத் தற்போது மிஷேல் ஒபாமா பிடித்துவிட்டதாக கேலப் ஆய்வு கூறுகிறது. அமெரிக்கர்கள் அதிகம் விரும்பும் ஆண்மகன் பராக் ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 11 ஆண்டுகளாக அவர் அந்தப் பெருமைக்குச் சொந்தக்காரராக இருந்து வருகிறார்.