பிலிப்பீன்சில் நிலநடுக்கம்

பிலிப்பீன்சில் நிலநடுக்கம்

1 mins read

மணிலா: பிலிப்பீன்சின் தெற்குப் பகுதியில் உள்ள மிண்டானோ தீவுப் பகுதியில் நேற்று 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. ஜெனரல் சான்டோஸ் நகருக்கு அருகே பூமிக்கடியில் 59 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் உருவானதாகக் கூறப்பட்டது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் தொடர்பான தகவல் எதுவும் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு பின்னர் மீட்டுக்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.