கோலாலம்பூர்: மலாய்க்காரர்களின் நலன்களை பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) கட்சி பாதுகாக்கும் என்று அக்கட்சியின் தலைவரும் மலேசியப் பிரதமரு மான டாக்டர் மகாதீர் முகம்மது கூறியுள்ளார். இந்த நாட்டில் மலாய்க்காரர் களின் நலன்களைப் பாதுகாக்க, ஒரு மலாய் கட்சி தேவை என மலேசியாவில் உள்ள மலாய்க் காரர்கள் இன்னும் நம்புவதால் பிரிபூமி பெர்சத்து மலாய்க்காரர் களுக்கான கட்சியாக உருவானது என டாக்டர் மகாதீர் கூறினார். "மலாய்க்காரர்கள் தங்களைப் பாதுகாக்க ஒருவர் தேவை என எண்ணுகின்றனர்.
மலாய்க் காரர்களால் மட்டுமே அவர்களைப் பாதுகாக்க முடியும் எனவும் நம் கின்றனர். அதனால் அவர்களுக்கு இந்தக் கட்சி தேவைப்படுகிறது. "அவர்களின் விருப்பத்தை பெர்சத்து கட்சி பூர்த்தி செய்ய வில்லை என்றால் நமக்கு (பக்கத்தான் ஹரப்பான்) மலாய்க் காரர்களின் ஆதரவு கிடைக்காது. நாம் எப்போதும் தோற்றுப்போக வேண்டிவரும்," என டாக்டர் மகாதீர் புத்ராஜெயாவில் உள்ள அவரது அலுவலகத்தில், ஊடக நிறுவனங்களுடனான ஒரு நேர்காணலின்போது கூறினார். தானும் இன்னும் சில முன்னாள் அம்னோ தலைவர்களும் சேர்ந்து பெர்சத்து கட்சியை உருவாக்கி, அது மலாய்க்காரர்களுக்கான கட்சி என்பதை வலியுறுத்தவில்லை என்றால் 14வது பொதுத் தேர்தலில், தேசிய முன்னணியும் திரு நஜிப்பும் நிச்சயம் ஆட்சியைப் பிடித்திருப்பார்கள் என டாக்டர் மகாதீர் சொன்னார்.

