கோலாலம்பூர்: பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) கூட்டணி அரசாங்கத்தின் தலைவரும் மலேசியப் பிரதமருமான டாக்டர் மகாதீர் முகம்மது முதலில் அரசாங் கத்தைச் சரிசெய்யட்டும். பின்னர் அன்வார் இப்ராஹிமின் கைகளில் நாட்டை ஒப்படைக்கட்டும் என பெர்சத்து கட்சியின் துணைத் தலைவர் முக்ரிஸ் மகாதீர் கூறினார். அன்வார் தலையெடுப்பதற்கு முன்னர் மலேசிய அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளைச் சரிசெய்ய டாக்டர் மகாதீருக்கு முதலில் வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றார் முக்ரிஸ்.
பெர்சத்து கட்சிக் கூட்டத்தில் அடுத்த பொதுத் தேர்தல் வரை டாக்டர் மகாதீர் பிரதமராக இருப் பதற்கு முன்மொழியப்பட்டது குறித்து வலம் வரும் வதந்திகள் தொடர்பில் அவர் நேற்று நடை பெற்ற பெர்சத்து ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் இவ்வாறு பேசினார். பல ஆலோசனைகள் இவ்வாறு முன்மொழியப்பட்ட போதும் பக்கத்தான் ஹரப்பான் கட்சியில் உள்ள பங்காளிகள், பொதுமக்கள் ஆகியோரின் விருப் பங்களைப் பொறுத்து முடிவுகள் எடுக்கப்படும் என்று டாக்டர் மகாதீர் வலியுறுத்தினார்.
கைப்பற்றப்பட்ட அரசாங்கத் தைச் சரிசெய்யக் கொஞ்ச காலம் எடுக்கும் என்பதால் இது நல்ல யோசனையாக இருக்கலாம் என் பது முக்ரிசின் நம்பிக்கை. "சிதைந்த ஓர் அரசாங்கத்தை மறுபடியும் பழையபடியே கொண்டு வருவது அவ்வளவு எளிதான வேலை அல்ல," என்றார் முக்ரிஸ். பிகேஆர் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராஹிம் அடுத்த பிரதமராக பொறுப்பேற்கும் பக்கத்தான் கூட்டணி அரசாங்கத் தின் திட்டத்தை இந்த ஆலோசனை எவ்வகையிலும் பாதிக்காது என்றும் முக்ரிஸ் குறிப்பிட்டார்.
டாக்டர் மகாதீருக்குப் பிறகு அன்வார் எட்டாவது பிரதமராக பதவி ஏற்பதற்குத் திட்டங்கள் உள்ளன. ஆனால் இதற்குச் சரியான காலநேரத்தைக் குறிப்பது மிக சிரமமான ஒன்றாக உள்ளது. அன்வாரிடம் அரசாங்கத்தை ஒப்படைக்கும்போது அது முழுமை யாக, சிதைவுறாத நிலையில் இருக்கவேண்டும் என்பதே அவர்களின் திட்டம். பக்கத்தான் கூட்டணி செய்து கொண்ட ஒப்பந்தப்படி அன்வார் பிரதமர் பொறுப்பை ஏற்பதற்கு முன் டாக்டர் மகாதீர் ஈராண்டு களுக்குத் தம் தலைமைப் பொறுப்பை ஆற்றுவதாகும்.

