மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கு அனுப்பிய புத்தாண்டு வாழ்த்துக் கடிதத்தில், பல்வேறு விவகாரங்கள் தொடர்பில் ரஷ்யா கலந்து பேசத் தயாராக இருப்பதாகக் கூறி அழைப்பு விடுத்துள்ளார். சென்ற மாத இறுதியில் புட்டினுடன் சந்திக்கத் திட்டமிட்டிருந்த டிரம்ப், உக்ரேனிய கப்பல்கள் மீது ரஷ்ய படைகள் நடத்திய துப்பாக்கித் தாக்குதலால் சந்திப்பை ரத்து செய்தார். உத்திபூர்வ நிலைத்தன் மைக்கும் அனைத்துலக பாது காப்புக்கும் ரஷ்ய, அமெரிக்க உறவுகள் மிக முக்கியம் என்று இப்போது புட்டின் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
டிரம்ப்புக்கு அழைப்பு விடுத்த புட்டின்
1 mins read

