கலிஃபோர்னியா: அமெரிக்காவில் நேற்று முன்தினம் ஏற்பட்ட இணையத் தாக்குதல் சம்பவத் தால் பல்வேறு முன்னணிப் பத் திரிகை நிறுவனங்களின் நாளிதழ்கள் அச்சிடப்படுவதிலும் விநியோகம் செய்யப்படுவதிலும் தடைகள் ஏற்பட்டன. 'லாஸ் ஏஞ்சலிஸ் டைம்ஸ்', 'சிக்காகோ டிரிபியுன்' போன்ற நாட்டின் பிரதான பத்திரிகைகள் இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டன. இணையத் தாக்குதலை நடத் தியோர் அமெரிக்காவுக்கு வெளியிலிருந்து இதைச் செய்து உள்ளதாக நம்பப்படுகிறது.
லாஸ் ஏஞ்சலிஸ் நகரிலுள்ள ஒரே தயாரிப்புத் தளத்தைப் பயன் படுத்தும் அனைத்து பத்திரி கைகளும் இணையத் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டதால் அவற்றின் சனிக்கிழமை நாளிதழ் கள் தாமதமாக விநியோகம் செய்யப்பட்டன. இணையத் தாக்குதலுக்குக் காரணமாக இருந்த மென் பொருளை வெள்ளிக்கிழமை அன்று 'டிரிபியுன் பப்ளிஷிங்' நிறுவனம் முதன்முதலில் கண்டு பிடித்தது. இந்நிறுவனத்தின்கீழ் இயங் கும் அனைத்து பத்திரிகைகளின் நிர்வாக அலுவலக அமைப்புகளும் இந்தத் தாக்குதலால் பாதிக்கப் பட்டதாக நிறுவனத்தின் பேச் சாளர் தெரிவித்தார்.
அத்துடன் வாடிக்கையாளர் களின் கடன் அட்டை விவரங் களும் தனிப்பட்ட தகவல்களும் ஊடுருவப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை என்றும் கூறப்பட்டது. தனிப்பட்ட தரவுகளைத் திருடுவதை விட இணையக் உள்கட்டமைப்பைச் செயலிழக்கச் செய்வதே இந்த இணையத் தாக் குதலின் நோக்கமாக இருக்கலாம் என்று 'எல்ஏ டைம்ஸ்' பத்திரிகைக் கு நம்பகமான தகவல் தெரிவிக்கப் பட்டது. பல பத்திரிகை நிறுவனங் களைப் பாதித்துள்ள இந்த இணையத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கிடைத்த புகார்களை உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை யினர், அரசாங்கத்துடனும் பத்திரிகைத் துறையினருடனும் இணைந்து விசாரணை மேற் கொண்டு வருவதாகவும் பேச்சாளர் தெரிவித்தார்.

