மான்செஸ்டர் ரயில் நிலைய கத்திக்குத்தில் மூவர் காயம்

மான்செஸ்டர் ரயில் நிலைய கத்திக்குத்தில் மூவர் காயம்

1 mins read
a70b166b-1a17-4ded-90a7-d655d3b067f6
-

மான்செஸ்டர்: பிரிட்டனின் வடமேற்குப் பகுதியிலுள்ள மான் செஸ்டர் நகரில் நடந்த கத்திக் குத்து சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்தனர் இந்தத் தாக்குதல் புத்தாண் டுக்கு முன்தினம் விக்டோரியா ரயில் நிலையத்தில் நிகழ்ந்தது. தாக்குதலை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் சமய வாசகங்களை முழங்கிக்கொண்டி ருந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். பிரிட்டன் மற்ற நாடுகளை வெடிகுண்டுகளால் தாக்கும் வரை இத்தகைய சம்ப வங்கள் தொடர்ந்து நிகழும் என்று அவர் தெரிவித்ததாகப் போலிசார் கூறினர். சந்தேக நபர் உயிருடன் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுமக்கள் இருவரும் போலிஸ் அதிகாரி ஒருவரும் தாக்கப்பட்டதாக பிரிட்டிஷ் போக்குவரத்து போலிஸ் தெரி வித்தது. காயமடைந்த இம்மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்பட்டது.

மான்செஸ்டரின் விக்டோரியா ரயில் நிலையத்தில் நடந்த கத்திக்குத்துத் தாக்குதலுக்குப் பிறகு சம்பவ இடத்தை போலிஸ் அதிகாரிகள் கண்காணிக்கின்றனர். படம்: ஏஎஃப்பி