பெர்லின்: ஜெர்மனியில் புத்தாண் டைக் கொண்டாடிக் கொண்டிருந்த கூட்டம் ஒன்றுக்குள் ஆடவர் ஒருவர் தனது காரை வேண்டு மென்றே ஓட்டிய சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்தனர். ஜெர்மனியின் மேற்குப் பகுதியில் உள்ள பெட்ரோப் நகரில் இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் நள்ளிரவுவாக்கில் நடந்தது. இது குடியேறிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் என்று போலிசார் தெரிவித்தனர். "வெளிநாட்டினர் மீதான பகைமையின் காரணமாக இந்த ஆடவர் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என அதிகாரிகள் நினைக்கின்றனர்," என்று அந்நாட்டின் போலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
50 வயது மதிக்கத்தக்க இந்த ஆடவர் மனநலம் பாதிக்கப்பட்ட வராக இருக்கலாம் என்றும் கூறப் படுகிறது. எதிரே நடந்து கொண்டிருந்த ஒருவர் மீது மோத வாகன ஓட்டுநர் முதலில் முயன்றார். ஆயினும் அவரது காருக்கு முன்னால் இருந்தவர்கள் தப்பி யோடினர். பின்னர், சாலையோரத்தில் வாணங்களை வெடித்துக் கொண் டிருந்த சிலரின்மீது ஆடவர் தனது காரை மோதவிட்டார். இதனால் நான்கு பேர் காய மடைந்ததாக போலிசார் தெரி வித்தனர். இவர்களில் சிலர் கடுமையாகக் காயமடைந்து உள்ளனர். காயமடைந்தோரில் ஆப்கானிஸ் தானையும் சிரியாவையும் சேர்ந்த வர்கள் அடங்குவர் என்று அதி காரிகள் கூறினர். இதுபோன்ற மற்றொரு சம்பவமும் ஜப்பானில் நேற்று முன்தினம் நடந்தது.

