விமான விபத்துகளில் பலியானோரின் எண்ணிக்கை கடந்தாண்டு கூடியது

விமான விபத்துகளில் பலியானோரின் எண்ணிக்கை கடந்தாண்டு கூடியது

1 mins read

வா‌ஷிங்டன்: பயணிகள் விமானச் சேவை விபத்துகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு கூடியுள்ளதாக 'டு70' என்ற ஆய்வு நிறுவனமும் அமெரிக்காவின் விமானத்துறை பாதுகாப்பு அமைப்பும் தெரிவித்துள்ளன. 2018ஆம் ஆண்டில் பயணிகளுக்கான விமானங்கள் விழுந்து நொறுங்கிய சம்பவங்களில் 500க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். ஆயினும், இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது அரிது என்று இந்த இரண்டு அமைப்புகளும் வலியுறுத்தின. கடந்தாண்டில் நிகழ்ந்த ஒவ்வொரு மூன்று மில்லியன் விமான பயணங்களுக்கும் ஒரு பயணத்தின்போது உயிரிழப்பு நேர்ந்தது. இது, 2017ஆம் ஆண்டுக்கான எண்ணிக்கையைவிட மிக அதிகம் என்றும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆக அதிகம் என்றும் கூறப்படுகிறது.