பெட்டாலிங் ஜெயா: கடந்த ஜூலை நிறுத்தி வைக்கப்பட்ட கிழக்குக் கரை ரயில் திட்டம் (இசிஆர்எல்) தொடங்கப்படலாம் என்று மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்திருக்கிறார். சீனா சம்மதித்தால் இந்தத் திட்டம் குறைக்கப்பட்ட அளவில் செயல்படுத்தப்படலாம் என்று அவர் மலேசிய ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இது குறித்து சீனாவுக்கும் மலேசியாவுக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து கொண்டிருப் பதாகவும் தீர்வு இன்னும் எட்டப்படவில்லை என்றும் டாக்டர் மகாதீர் கூறினார். "மலேசியாவின் செலவு குறைய வேண்டும். சீனாவுக்கு இழப்பு நேரக்கூடாது. இவற்றை நாங்கள் உறுதிசெய்ய முயல்கிறோம்," என்றார் டாக்டர் மகாதீர். ரயில் திட்டத்திற்கான நிபந்த னைகள் மலேசியாவுக்குப் பாதக மாக இருந்ததால் இதை ரத்து செய்ய அவர் கடந்தாண்டு பொதுத்தேர்தலின்போது சூளு ரைத்திருந்தார்.
சிலாங்கூரின் கிள்ளான் துறைமுகத்தையும் கிளந்தானின் பெங்கலான் குபோரையும் இசிஆர்எல் திட்டம் இணைக்கவிருந்தது. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

