பெய்ருட்: சிரியாவில் நடந்த கடுமையான பூசலுக்குப் பிறகு அதிபர் பஷார் அல் அசாத், ஆட்சியைத் தனது முழு கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவரவுள்ளார். இது, சிரியாவின் எதிர்க்கட்சி யினரைப் பெரும் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.
இவர்களில் பலர் தங்கள் சொந்த வீடுகளுக்குத் திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். அனைத்துலகச் சமூகம் தங் களைக் கைவிட்டதாகவும் அவர்கள் கருதுகின்றனர். "இப்போது நான் என் தாய்நாட்டிற்காக ஏங்குகிறேன். தற்போதைய நிர்வாகம் இன்னும் ஆட்சியில் இருக்கையில் என்னால் மீண்டும் தாய்நாட்டுக்குத் திரும்ப முடியாது" என்று நாடு கடத்தப்பட்ட ஆர்வலர் ஷாடி மட்டார் துருக்கி யிலிருந்து தெரிவித்தார்.
சிரியாவின் மக்களுக்கு ஆதரவு அளிப்பதாக முன்னர் உறுதி அளித்த பல்வேறு நாடுகள் இப்போது அவர்களை உள்ளே நுழையவிட மறுப்பதாக அவர் கூறினார். 2011ஆம் ஆண்டில் திரு அசாத்துக்கு எதிரான ஆர்ப் பாட்டங்களில் தொடங்கிய தொடர் வன்முறையால் 360,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
மேலும் மில்லியன் கணக்கானோர் தங்கள் இருப்பிடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டனர். இந்தப் பூசல்கள் நடந்தபோதும் திரு அசாத்தின் அரசாங்கம் வீழ்ச்சி அடையவில்லை. ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளின் ஆதரவைப் பெற்று கிளர்ச்சிப் படைகளை திரு அசாத்தின் அரசாங்கம் இப்போது நாட்டின் பல்வேறு பகுதி களிலிருந்து வெளியேற்றியுள்ளது.

