டாக்கா: அண்மையில் நடந்து முடிந்த பங்ளாதேஷ் பொதுத் தேர்தலில் மோசடி நடந்ததாக எதிர்க்கட்சியினர் போர்க் கொடி தூக்கியுள்ளனர். அவாமி லீக்கின் ஷேக் ஹசினா பங்ளாதேஷின் பிரதமராக நேற்று பதவி ஏற்றார். தேர்தலில் வெற்றி பெற்ற அவாமி லீக் கட்சியினர் அவருடன் சேர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்றனர். வாக்காளர்களை மிரட்டியும் கள்ள வாக்குகளைப் போட்டும் அவாமி லீக் கட்சி 90 விழுக்காட்டுக்கும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றியதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். அவாமி லீக் கட்சி இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. இந்நிலையில், தேர்தல் முடிவுகளை எதிர்க்கும் வகையில் இடதுசாரி கட்சியைச் சேர்ந்தவர்கள் தங்கள் வாய்களில் கறுப்புத் துணியைக் கட்டி போராட்டம் செய்தனர்.
பங்ளாதேஷ் பிரதமர் பதவியேற்பு: நூதனப் போராட்டத்துடன் இடதுசாரிகள் புறக்கணிப்பு
1 mins read
-

