வாஷிங்டன்: அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபைத் தலைவராக ஜனநாயகக் கட்சியின் 78 வயது நேன்சி பெலோசி பதவியேற்க இருக்கிறார். இதற்கு முன் இல்லாத அளவில் ஆக அதிகமான பெண்களைப் பிரதிநிதிகள் சபை கொண்டிருக் கிறது. தற்போது அந்தச் சபையில் 102 பெண்கள் உள்ளனர். இது பிரதிநிதி சபையில் இருக்கும் உறுப்பினர்களில் 23.4 விழுக் காடாகும். இதற்கு முன்பு 19 விழுக்காடுதான் ஆக அதிகமான பெண் உறுப்பினர்களின் விகித மாக இருந்தது. சபைத் தலைவராக பெலோசி நியமிக்கப்பட்டால் அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கு எதிரான எதிர்ப்பு இவரது தலைமையில் வலுவடையும் என்று கூறப்படு கிறது. அதுமட்டுமல்லாது, கடந்த ஐம்பது ஆண்டுகளில் இருமுறை சபைத் தலைவராகப் பதவி வகிக்கும் முதல் பிரதிநிதிகள் சபை உறுப்பினர் எனும் பெருமையும் அவரைச் சேரும்.
பிரதிநிதிகள் சபைத் தலைவராகப் பதவியேற்க இருக்கும் பெலோசி
1 mins read
-

