பெய்ஜிங்: விண்வெளி ஆராய்ச்சி யில் சீனா சாதனை படைத்துள்ளது. அந்நாடு அனுப்பிய விண்கலம் நிலவின் மறுபக்கத்தில் நேற்று தரையிறங்கியது. இந்தத் தகவலை சீன ஊடகம் அறிவித்தது. அமெரிக்கா, முன்னாள் சோவியத் யூனியன் ஆகிய நாடுகளின் விண்கலங்கள் மட்டுமே நிலவில் தரையிறங்கி உள்ளன. அந்த வரிசையில் சீனாவும் தற்போது சேர்ந்து கொண்டது. ஆனால் நிலவின் மறுபக்கத்தில் விண்கலம் ஒன்று தரையிறங் கியிருப்பது இதுவே முதல்முறை. சாங்க என்று அழைக்கப்படும் அந்த விண்கலம் நிலவின் மிக பழமையான, ஆழமான பள்ளத்தில் தரையிறங்கியிருப்பதாகக் கூறப் படுகிறது. இதனால் நிலவின் ஆரம்பம், காலப்போக்கில் அதற்கு ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து சீன விஞ்ஞானிகள் ஆராய்வதற்கு உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
நிலவின் மறுபக்கத்தில் தரையிறங்கிய சீன விண்கலம்
1 mins read
-

