சீனாவுடனான பல பெருந்திட்டங் களை ரத்து செய்ததாலும் அல்லது மறுஆய்வு செய்யப்படும் என அறி வித்ததாலும் மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது ஜப்பானுக்கு ஆதரவாகவும் சீனாவிற்கு எதிராக வும் செயல்பட்டு வருகிறார் எனச் சிலர் முத்திரை குத்தி வருகின் றனர். ஆனால், அது உண்மையில்லை என மறுப்புத் தெரிவித்துள்ளார் டாக்டர் மகாதீர். அனைத்துலக அளவில் பல நேரங்களில் சீனாவைத் தற்காத்துப் பேசியுள்ளதாகவும் தான் சீனாவின் நல்ல நண்பன் என்றும் டாக்டர் மகாதீர் கூறியுள்ளார்.
தான் ஜப்பானுக்குப் பலமுறை சென்றுவந்துள்ளதாகவும் சீன ஒத் துழைப்புடன் கூடிய பெருந்திட்டங் களை மறுஆய்வு செய்துவருவதாக வும் பலர் கூறியதைக் கேட்டபோது தனக்குச் சிரிப்பு வந்ததாக அவர் குறிப்பிட்டார். சின் சியூ நாளிதழுக்கு அளித்த சிறப்பு நேர்காணலின்போது, மற்ற நாடுகளில், குறிப்பாக ஜப்பானிலும் கூட, தாம் சீனாவைத் தற்காத்துப் பேசியிருப்பதாக அவர் சொன்னார்.
"ஜப்பானில் ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டபோது, சீனா உடனான உறவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று என்னிடம் கேட்டனர். அதற்கு, 'சீனாவுடனான உறவுகளை மலேசியா கட்டிக்காத்து வருகிறது. இருதரப்பு வர்த்தக உறவுகள் தொடர்கின்றன. சீனா உடன் நட்புறவுடனேயே இருக்கி றோம்' என்று நான் பதில் அளித் தேன்," என்று அவர் விவரித்தார்.
"மலேசியாவில் ஏராளமான சீனர்கள் இருந்தாலும் மலேசி யாவை அந்நாடு காலனி ஆதிக் கத்திற்கு உட்படுத்தவில்லை. அதே நேரத்தில், 12,800 கி.மீ. தொலைவில் இருக்கும் போர்ச்சு கல், மலேசியாவைத் தனது ஆதிக் கத்தின்கீழ் கொண்டு வந்தது. இதைப் பார்க்கும்போது, நாங்கள் யாருக்குப் பயப்பட வேண்டும்? சீனாவுக்கா இல்லை ஐரோப்பா வுக்கா?" என்று அவர் கேட்டார். "சீன நாட்டவர் பலர் என்னை அறிவர். அவர்கள் என்னை சீனா வின் நல்ல நண்பனாகப் பார்க் கின்றனர். ஈஸ்ட் கோஸ்ட் ரயில் இணைப்புத் திட்டத்தை மறுஆய்வு செய்வதாலும் சாபா, மலாக்கா இயற்கை வாயு குழாய்த் திட்டத்தை ரத்து செய்ததாலும் என்னை சீனா வின் எதிரியாகப் பார்ப்பதா? மலே சியா கடும் நிதிப் பிரச்சினையைச் சந்தித்து வருகிறது என்பது சீன அரசாங்கத்திற்கும் தெரியும்," என்று அவர் விளக்கம் அளித்தார்.
இந்த ஆண்டில் சீனாவிற்கு மீண்டும் செல்வீர்களா எனக் கேட் டதற்கு, "ஆம். தேவை ஏற்பட்டால் செல்வேன்," என்றார். இருநாட்டு அரசதந்திர உறவு கள் தொடங்கி 40 ஆண்டுகள் ஆவதை நினைவுகூரும் விதத்தில் ஸிங் ஸிங், லியாங் லியாங் என இரு பாண்டா கரடிகளை சீனா, மலேசியாவிற்கு அன்பளிப்பாக வழங்கியிருப்பதை திரு மகாதீர் சுட்டிக்காட்டினார்.

