கேமரன் ஹைலண்ட்ஸில் மீண்டும் மனோகரன் போட்டி

கேமரன் ஹைலண்ட்ஸில் மீண்டும் மனோகரன் போட்டி

2 mins read
20174f38-e89b-4e52-af44-1b4aaa302346
-

வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ள மலேசியாவின் கேமரன் ஹைலண்ட்ஸ் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி வேட்பாளராக எம்.மனோகரன் அறிவிக்கப்பட்டுள்ளார். நேற்றுக் காலை நடைபெற்ற அந்தக் கூட்டணியின் தலைமைத் துவ மன்றக்கூட்டத்துக்குப் பின் னர் வேட்பாளரின் பெயரை பிர தமரும் கூட்டணியின் தலைவரு மான டாக்டர் மகாதீர் அறிவித் தார்.

"கேமரன் ஹைலண்ட்ஸில் மனோகரன் போட்டியிட பக்கத் தான் ஹரப்பான கூட்டணி ஒப்புக் கொண்டுள்ளது. இந்த இடைத் தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றிபெறும்," என அவர் செய்தி யாளர்களிடம் கூறினார். திரு மனோகரன், கூட்டணி யில் அங்கம் வகிக்கும் ஜன நாயகச் செயல் கட்சியைச் சேர்ந் தவர். கடந்த ஆண்டு மே 9ஆம் தேதி நடைபெற்ற 14வது பொதுத் தேர்தலில் இந்தத் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளர் சி. சிவராஜாவை எதிர்த்து பக்கத் தான் ஹரப்பான் வேட்பாளராகப் போட்டியிட்டவர் மனோகரன். அந்த ஐந்து முனைப் போட்டியில் மஇகா உதவித் தலைவரான சிவ ராஜா வெறும் 597 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். ஆனால் தேர்தலின்போது வாக்காளர்களுக்குக் கையூட்டு கொடுத்ததற்கான ஆதாரம் நிரூ பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மலேசிய தேர்தல் நீதிமன்றம் சிவராஜாவின் வெற்றியை ரத்து செய்து தொகுதி காலியானதாக அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. வரும் 12ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தினமாகும். மீண்டும் இதே தொகுதியில் களமிறங்கும் மனோகரனுக்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் மனோகரன் (நடுவில்) வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவருடன் பிரதமர் மகாதீர், துணைப் பிரதமர் வான் அஸிஸா, கெஅடிலான் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் உள்ளிட்டோர். படம்: மலேசிய ஊடகம்