'மாமன்னர் பதவி விலகல் வெறும் வதந்தியே'

'மாமன்னர் பதவி விலகல் வெறும் வதந்தியே'

1 mins read
Google News Preferred Icon

மலேசிய மாமன்னர் ஐந்தாம் சுல்தான் முகம்மது அரியணையில் இருந்து இறங்கப்போவதாக அதி காரபூர்வத் தகவல் எதுவும் இல்லை என்று பிரதமர் மகாதீர் முகம்மது கூறியுள்ளார். "உங்களைப் போலவே செவி வழிச் செய்தியாகவே நானும் இதை அறிந்தேன். இது தொடர் பாக எனக்கு எந்தக் கடிதமும் வரவில்லை. அவர் முடிதுறப்பதாக அதிகாரபூர்வமாக எந்த அறிகுறி யும் தென்படவில்லை," என்றார் டாக்டர் மகாதீர். ஆதலால், அது பற்றித் தாம் எதுவும் பேசப்போவதில்லை என்று செய்தியாளர்களிடம் திரு மகாதீர் சொன்னார். மலேசிய மாமன்னர் பதவி விலகப்போவதாக சமூக ஊடகங் களில் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.