'புகைக்காதீர்' எனக் கூறிய இந்தியருக்கு அறை

'புகைக்காதீர்' எனக் கூறிய இந்தியருக்கு அறை

1 mins read

ஷா ஆலம்: இம்மாதம் முதல் தேதியில் இருந்து மலேசிய உண வகங்களில் புகைபிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அதைப் பற்றிக் கவலைகொள்ளாது உணவகங் களில் புகைப்பதை ஒரு சிலர் தொடர்கின்றனர். அப்படி ஒரு சம்பவத்தில், 'புகைக்க வேண்டாம்' எனச் சொன்ன இந்திய ஊழியர் ஒருவருக்கு அறை விழுந்தது. "புகைபிடிக்காதீர்' என்ற அறி விப்புப் பலகைகளை வைத்துள் ளோம். ஆனாலும் வாடிக்கையாளர் களில் சிலர் புகைப்பதைத் தொடர்கின்றனர். இம்மாதம் 1ஆம் தேதி மதியம் 12.30 மணி இருக் கும். குழுவாக வந்த மூவர் உண வகத்தில் புகைத்துக்கொண்டிருந் தனர். "அவர்களிடம் சென்று, 'இங்கு புகைக்கவேண்டாம்' எனப் பணி வுடன் சொன்னேன். அதைக் கேட் டதும் அவர்களில் ஒருவர் எழுந்து என் கன்னத்தில் அறைந்ததால் அதிர்ச்சியடைந்தேன். உடனே அவர்கள் அங்கிருந்து கிளம்பிவிட் டனர்," என்றார் 25 வயதான திரு செல்வம். இந்தச் சம்பவம் தொடர்பில் அவரின் முதலாளி போலிசில் புகார் அளித்துள்ளார். போலிஸ் அது பற்றி விசாரித்து வருகிறது என்றும் பாதிக்கப்பட்ட திரு செல்வம் நேரில் வந்து வாக்குமூலம் அளிக்கவேண்டும் என்றும் ஷா ஆலம் போலிஸ் துணை ஆணையர் தெரிவித்தார்.