ஜகார்த்தா: இவ்வாண்டு ஏப்ரலில் நடக்க உள்ள இந்தோனீசிய அதிபர் தேர்தலில் இப்போதைய அதிபர் ஜோக்கோ விடோடோ மீண்டும் போட்டியிடவுள்ளார். இந்நிலையில், அவருக்கு ஆதரவாக ஏற்கெனவே வாக்குச் செலுத்தப்பட்ட வாக்குச்சீட்டுகள் அடங்கிய ஏழு கொள்கலன்கள் சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்டு ஜகார்த்தாவில் உள்ள ஒரு துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்தி உலவுகிறது. இது பற்றி விசாரிக்கப்படும் என இந்தோ னீசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
'தயார்நிலையில் ஜோக்கோவி ஆதரவு வாக்குச்சீட்டுகள்'
1 mins read

