மகாதீர்: சிங்கப்பூருடன் மலேசியா பேச்சுவார்த்தை

கோலாலம்பூர்: சிலேத்தார் விமான நிலைய விவகாரம் தொடர்பில் மலேசியா, சிங்கப்பூருடன் பேச்சு வார்த்தை நடத்தும் என மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது தெரி வித்துள்ளார். "அந்த விவகாரம் தொடர்பாக சிங்கப்பூருடன் பேச்சுவார்த்தை யில் ஈடுபடுவது என அமைச்சர வையில் முடிவெடுக்கப்பட்டது," என்று டாக்டர் மகாதீர் செய்தியா ளர்களிடம் கூறினார். சிங்கப்பூர் வெளியுறவு அமைச் சர் விவியன் பாலகிருஷ்ணனுடன் இம்மாதம் 8ஆம் தேதி பேச்சு நடத்தவுள்ளதாக மலேசிய வெளியுறவு அமைச்சர் சைஃபுதீன் அப்துல்லா கடந்த செவ்வாய்க்கிழ மையன்று தெரிவித்திருந்தார். சிலேத்தார் விமான நிலையத் தில் 'இன்ஸ்ட்ருமென்ட் லேண்டிங் சிஸ்டம்' எனும் தொழில்நுட்பத்தைச் சிங்கப்பூர் பயன்படுத்துவதற்கு மலேசியா எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. ஏனெனில், அத்தொ ழில்நுட்பத்தால் வழிகாட்டப்படும் விமானங்கள் விதிமீறி மலேசிய வான்வெளியைப் பயன்படுத்தலாம் என மலேசியா கூறி வருகிறது. ஜோகூரின் பாசிர் கூடாங்கிலிருந்து 2 கி.மீ. தொலைவில் சிலேத்தார் விமான நிலையம் அமைந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!