தாய்லாந்து: மரங்களை வேரோடு பெயர்த்த புயல்; ஒருவர் பலி

தாய்லாந்து: மரங்களை வேரோடு பெயர்த்த புயல்; ஒருவர் பலி

1 mins read
05e2ef7f-a8c0-43c3-aac1-d084eb8ee010
-

தாய்லாந்தில் கிட்டத்தட்ட முப்பதாண்டுகளுக்குப் பின் வீசிய புயலுக்கு ஒருவர் பலியானார். அந்நாட்டின் தெற்குக் கடலோரப் பகுதியில் 'பபுக்' புயல் நேற்று கரை கடந்தது. கடலில் பெரும் உயரத்திற்கு அலைகள் எழுந்தன. பலத்த காற்று வீசியதால் பாக் பாகாங் மாவட்டத்தில் மின்கம்பங்கள் சாய்ந்தன. மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்ததால் பல வீடுகள் சேதமடைந்தன. மின்சார விநியோகம் தடைபட்டுள்ளது. 65 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் கோ சமுயில் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன; பயணப் படகு முனையங்கள் மூடப்பட்டன. படம்: ராய்ட்டர்ஸ்