அன்வார்: எனக்கெதிராக சதி என்பது முற்றிலும் பொய்ச் செய்தி

அன்வார்: எனக்கெதிராக சதி என்பது முற்றிலும் பொய்ச் செய்தி

1 mins read

கோலாலம்பூர்: மலேசியாவின் எட்டாவது பிரதமராக அன்வார் இப்ராஹிம் பதவியேற்பதை அவரது பிகேஆர் கட்சியினர் சிலரே விரும்பவில்லை என்றும் அதைத் தடுக்கும் வகையில் அவர்கள் சதித்திட்டம் தீட்டி வரு கின்றனர் என்றும் நாளிதழ் ஒன்றில் இரு நாட்களுக்குமுன் செய்தி வெளியாகி இருந்தது. ஆனால், அந்தச் செய்தியில் உண்மையில்லை என்றும் அது பொய்ச் செய்தி என்றும் அன்வார் விளக்கம் அளித்துள்ளார். சொந்தக் காரணங்களுக்காக ஒரு சிலர் அத்தகைய சதிச் செயலில் இறங்கலாம் என்று ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரி கைக்கு அளித்த நேர்காணலின் போது அன்வார் சொன்னதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில், "அப்படி எதையும் நான் சொல்லவில்லை. எவ்வித பொய்ச் செய்திக்கும் இடமளிக்க முடியாது," என்று அன்வார் நேற்று செய்தியாளர் களிடம் சொன்னார்.

அதே நேரத்தில், தாம் பிரதம ராகப் பொறுப்பேற்பதில் சிலருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம் என்றும் ஜனநாயகத்தில் அதற்கு இடமுண்டு என்றும் அவர் குறிப் பிட்டார். இருப்பினும், குறிப்பிட்ட காலத் திற்குப் பின் பிரதமர் பதவியைத் தம்மிடம் ஒப்படைப்பதில் தாமும் இப்போதைய பிரதமர் மகாதீர் முகம்மதுவும் பக்கத்தான் ஹரப் பான் கூட்டணியும் இணக்கம் கண்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், "அதில் எந்தப் பிரச்சினை யும் இல்லை," என்றும் உறுதிபடக் கூறினார். இதற்கிடையே, 'ஒடாய் ரிஃபார்மசி' என்ற அன்வார் ஆதரவு அமைப்பினர், பிகேஆர் கட்சியில் உள்ள சிலர் அன்வார் பிரதமராவதைத் தடுக்கும் முயற்சி யில் இறங்கியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.