அமெரிக்கா: அரசுத்துறை முடக்கம் முடிவுக்கு வரலாம்

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் இரண்டு வாரங்களாக நீடித்து வரும் பகுதியளவு அரசுத்துறை முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான மசோதா பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப் பட்டது. உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்கு அடுத்த மாதம் 8ஆம் தேதிக்கு முன் னரும் உள்துறை, வர்த்தகம், போக்கு வரத்து, விவசாயம் உள்ளிட்ட துறை களுக்கு இவ்வாண்டு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள்ளும் நிதி ஒதுக்கீடு செய்ய அந்த மசோதா வழிவகுக்கிறது. அமெரிக்கா=மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்ட ஐந்து பில்லியன் அமெரிக்க டாலர் (S$6.8 பி.) நிதி ஒதுக்கவேண்டும் என அதிபர் டோனல்ட் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.

ஆனால், அந்தக் கோரிக்கையை நிராகரித்து, பிரதிநிதிகள் சபையின் புதிய தலைவர் நான்சி பெலோசி தலைமையில் ஜனநாயகக் கட்சி உறுப் பினர்கள் மசோதாவிற்கு ஆதரவளித்து நிறைவேற்றினர். முன்னதாக, அரசுத்துறை முடக் கத்தை முடிவுக்குக் கொண்டு வருவது, அரசுத் துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது ஆகிய இரு அம்சங்கள் கொண்ட அந்த மசோதாவை 'வீட்டோ' அதிகாரம் மூலம் ரத்து செய்வோம் என வெள்ளை மாளிகை மிரட்டல் விடுத்திருந்தது. ஆனால், அதைப் புறந்தள்ளிவிட்டு ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் பிரதிநிதிகள் சபையில் மசோதாவை நிறைவேற்றினர்.

இந்தப் பகுதியளவு முடக்கத்தால் கிட்டத்தட்ட 800,000 அரசாங்க ஊழி யர்களுக்கு ஊதியம் தரப்படவில்லை. அதனால், பண்டிகைக் காலத்தில் அவர்களின் பாடு திண்டாட்டமாகிப் போனது. பிரதிநிதிகள் சபையில் நிறைவேறிய மசோதா அடுத்ததாக செனட் சபை யிலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். ஆனால், குடியரசுக் கட்சியினரைப் பெரும்பான்மையாகக் கொண்டிருப்ப தால் செனட் சபையில் அம்மசோதா நிறைவேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை அங்கும் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் தனக்குரிய சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அதை ரத்து செய்வேன் என டிரம்ப் எச்சரித்துள்ளார். இதனிடையே, இம்மாதம் 29ஆம் தேதி நடைபெறவுள்ள இரு சபைகளின் நாடாளுமன்ற கூட்டு அமர்வில் வரு டாந்திர உரையை ஆற்ற வரும்படி அழைப்பு விடுத்து அதிபர் டிரம்ப்புக்கு பிரதிநிதிகள் சபையின் புதிய தலைவர் நான்சி பெலோசி கடிதம் எழுதியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!