கலிஃபோர்னியா துப்பாக்கிச் சூட்டில் மூன்று ஆடவர் பலி

கலிஃபோர்னியா துப்பாக்கிச் சூட்டில் மூன்று ஆடவர் பலி

2 mins read
Google News Preferred Icon

கலிஃபோர்னியாவின் உருட்டுப் பந்து மையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மூன்று ஆட வர்கள் மாண்டதாகவும் நால்வர் காயமுற்றதாகவும் அமெரிக்க போலிஸ் தெரிவித்தது. லாஸ் ஏஞ்சலிஸுக்கு தெற்கே சுமார் 40 கிலோ மீட்டர் தொலை விலுள்ள டோரன்ஸ் நகரின் 'கேபிள் ஹவுஸ் பவுல்' என்னும் அந்த மையத்தில் நேற்று அதி காலை பலர் சுட்டு வீழ்த்தப்பட்ட தாக அந்நகரின் போலிசார் டுவிட்டரில் தெரிவித்திருந்தனர். போலிஸ் படை அந்த இடத் துக்கு விரைந்திருப்பதாகவும் பொதுமக்கள் அந்தப் பகுதியி லிருந்து ஒதுங்கி இருக்குமாறும் போலிசார் அத்தகவலில் குறிப் பிட்டனர். துப்பாக்கிச்சூட்டுக்கு முன்ன தாக அந்த இடத்தில் பலத்த சண்டை நிகழ்ந்ததாக சம்ப வத்தை நேரில் கண்டவர்கள் கூறினர். அங்கு பிறந்த நாள் கொண் டாடிக்கொண்டிருந்த தமது 31 வயது சகோதரர் நெஞ்சில் சுடப் பட்டதாக ஆடவர் ஒருவர் செய்தி யாளர்களிடம் கூறினார். மேலும் டி ரயான் தாமஸ் என்பவர் தமது ஃபேஸ்புக்கில் பதிவேற்றிய காணொளியில் ரத்தவெள்ளத்தில் ஒருவர் மிதப் பது தெரிந்தது.

"துப்பாக்கியால் சரமாரியாகச் சுடப்பட்டது. அந்த இடம் முழு வதும் அலறல் கேட்டது. எங்கு பார்த்தாலும் ரத்தம் சிதறி இருந் தது. ஒரே பதற்றமாக இருந்தது. "எனது காலில் சிறிய காயம் ஏற்பட்டது. உள்ளே இருந்த பலரும் மாண்டனர், மேலும் சிலர் காயங்களுடன் சரிந்தனர். எஞ்சி யவர்கள் சிதறி ஓடினர். "நான் அவர்களிடமிருந்து சிறிது தூரம் தள்ளி இருந்தேன். பெண்கள் பலர் கதறி அழுதது எனக்குள் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது," என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். முன்னதாக ஏராளமான அழைப்புகள் வந்ததாகவும் பலர் சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பதாக அந்த அழைப்புகள் தெரிவித்த தாகவும் போலிசார் விவாதித்துக் கொண்டு இருந்த ஒலிப்பதிவை யும் அவர் பகிர்ந்துள்ளார். வாகன நிறுத்துமிடத்திலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக வும் மூவர் முதல் ஐவர் வரை அங்கு சுட்டு வீழ்த்தப்பட்டதாக வும் அதிகாரி ஒருவர் கூறினார். சண்டை எதற்காக நடந்தது, துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் கள் யார் என்ற விவரங்களை போலிசார் திரட்டி வருகின்றனர். முழுஅளவிலான போலிஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட் டுள்ளது.