தேசிய நெருக்கடி நிலை; டிரம்ப் எச்சரிக்கை

தேசிய நெருக்கடி நிலை; டிரம்ப் எச்சரிக்கை

1 mins read

வா‌ஷிங்டன்: நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலேயே மெக்சி கோவுடனான எல்லையில் சுவர் எழுப்ப தேசிய நெருக்கடி நிலையைத் தாம் பிரகடனம் செய்யக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசாங்க முடக்கத்தை இன்னும் பல ஆண்டுகளுக்குத் தொடர தாம் தயாராக இருப்பதாக அவர் உறுதி செய்துள்ளார். சுவர் எழுப்ப டிரம்ப் 5 பில்லியன் டாலர் நிதிக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கு ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதனால் இவ்விவகாரம் குறித்து தீர்வு காணப்படவில்லை. அமெரிக்க அரசாங்க முடக்கம் காரணமாக கடந்த டிசம்பர் 22லிருந்து ஏறத்தாழ 8,000 ஊழியர்கள் சம்பளம் இன்றி தவிக்கின்றனர்.