கோலாலம்பூர்: மலேசியாவின் கூட்டரசு அரசாங்கம் செயல்படும் முறை குறித்து ஜோகூரின் பட்டத்து இளவரசருக்குப் புரிய வில்லை என்று மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார். மலேசிய அரசாங்கம் ஆட்சி நடத்தும் முறையைப் பற்றி மாநில சுல்தான்கள் கருத்து தெரி விக்கும்போது அவற்றுக்குப் பதில் அளிக்க கூட்டரசு அரசுக்கு உரிமை இருப்பதாக டாக்டர் மகாதீர் கூறினார். அனைத்து விவகாரங்களையும் அரசியலாக்க வேண்டாம் என்றும் நாட்டை ஆட்சி செய்வதில் கவனம் செலுத்தும்படியும் ஜோகூர் பட்டத்து இளவரசர் இஸ்மாயில் இப்ராஹிம் அண்மையில் தெரி வித்திருந்தார். "கூட்டரசு அரசாங்கம் பற்றி அவருக்குப் புரியவில்லை. ஒரு வேளை கூட்டரசு அரசாங்கம் தொடங்கியபோது அவர் இன்னும் பிறக்கவில்லை என்று நினைக்கி றேன். அதனால்தான் அவருக்கு அது பற்றி தெரியவில்லை. ஆனால் அந்தக் காலகட்டத்தில் நான் இருந்தேன்," என்று டாக்டர் மகாதீர் கூறினார்.
"கூட்டரசு அரசாங்கம் என்பது மலேசியா முழுவதையும் ஆட்சி செய்யும் அரசாங்கமாகும்," என்பதை அவர் வலியுறுத்தினார். "கூட்டரசாங்கத்தின் கட்டுப் பாட்டின் கீழ் எவையெல்லாம் வருகின்றன. மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் எவையெல்லாம் உள்ளன என்பதைக் காட்டும் பட்டியல் எங்களிடம் இருக்கிறது. இருப்பினும், மாநில அரசின் கருத்துகளுக்குக் கூட்டரசு அரசாங்கம் பதிலளிக்கக் கூடாது என்று எங்கும் குறிப்பிடப்பட வில்லை," என்று பக்கத்தான் ஹரப்பான் தலைமைத்துவ மன்றத் துக்குத் தலைமைதாங்கிய பிறகு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத் தில் டாக்டர் மகாதீர் தெரிவித்தார். பக்கத்தான் ஹரப்பான் அரசாங் கத்தைப் பற்றி ஜோகூர் பட்டத்து இளவரசர் கொண்டிருக்கும் கருத்து பற்றி டாக்டர் மகாதீரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த டாக்டர் மகாதீர், "ஜோகூர் பட்டத்து இளவரசர் மலேசிய அரசாங்கத்தில் எந்தப் பதவியையும் வகிக்கவில்லை," என்று கூறினார்.

