போருக்குத் தயாராகும்படி சீன ராணுவத்துக்கு உத்தரவு

போருக்குத் தயாராகும்படி சீன ராணுவத்துக்கு உத்தரவு

2 mins read

பெய்ஜிங்: போருக்குத் தயாராகும் படி சீன அதிபர் ஸீ ஜின்பிங் தமது ராணுவத்துக்கு உத்தர விட்டுள்ளார். தென் சீனக் கடல் சர்ச்சை, அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் போன்ற விவகாரங்களுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. இது ஒரு புறம் இருக்க, தைவானைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர சீனா முனைப் புடன் இருக்கிறது. இந்நிலையில், தனது ராணு வத்தை வலுப்படுத்த சீனா ஆர்வம் காட்டி வருகிறது. பல்வேறு ஆபத்துகள், சவால்களை சீனா எதிர்கொள்வதாக அந்நாட்டின் உயர் ராணுவ அதிகாரிகளிடம் அதிபர் ஸீ நேற்று முன்தினம் தெரிவித்ததாக சீனாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான சிங்ஹுவா வெளியிட்டது.

சீனாவின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மேம்பாட்டுக்குத் தேவை யானவற்றை பூர்த்தி செய்யவும் சீன ராணுவம் கடுமையாக உழைக்க வேண்டும் என்று அதிபர் ஸீ கேட்டுக்கொண்டதாக அறியப் படுகிறது. இன்றைய காலகட்டத்துக்குத் தேவையான ராணுவ வியூகங்களை வகுக்க வேண்டும் என்றும் போருக்குத் தயாராக வேண்டும் என்றும் சீனாவின் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான அதிபர் ஸீ கூறினார். நெருக்கடி நிலையை சீன ராணுவம் மிக விரைவில் எதிர் கொள்ளும் ஆற்றலைக் கொண் டிருக்க வேண்டும் என்று அதிபர் ஸீ தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாது, கூட்டு நடவடிக்கை திறன்களை சீன ராணுவம் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர். மேலும் புது வகை போர்ப் படைகளை உருவாக்க வேண்டும் என்று அதிபர் ஸீ வலியுறுத்தினார். இதற்கிடையே, கூடிய விரைவில் சீனாவின் அனைத்து போர்க் கப்பல்களிலும் மின்காந்தப் பீரங்கிகள் பொருத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மற்ற நாடுகளின் போர்க் கப்பல்களைவிட சீனாவின் போர்க் கப்பல்கள் வலிமைவாய்ந்த வையாக இருக்கும் என சிங்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது.