மலேசிய மாமன்னர் விலகல்

மலேசியாவின் 15வது மாமன்னராகப் பதவி வகித்த ஐந்தாம் சுல்தான் முகம்மது தமது பதவியைத் துறந்துவிட்டார். மத்திய அரசமைப்புச் சட்டத்தின் 32(3)வது பிரிவின் படி மாமன்னர் பதவியிலிருந்து விலகியிருப் பதாக அரண்மனை குடும்பக் கட்டுப்பாட்டு அதிகாரி டத்தோ வான் அகம்மது தஹ்லான் அப் அஜிஸ் அறிவித்தார். மாமன்னர் தம்முடைய இந்த முடிவை மலேசியாவின் மன்னர்களுக்கு அதிகாரபூர்வ மாக ஒரு கடிதத்தின் மூலம் தெரியப்படுத்தி இருக்கிறார் என்றும் வான் அகம்மது அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார். மாமன்னர் பதவி வகித்தபோது நாட்டின் தலைவர் என்ற முறையில் தனக்குள்ள பொறுப்புகளை நிறைவேற்றி முடிக்க முயன்று இருக்கிறார் என்று வான் அகம்மது அறிக் கையில் கூறினார்.

நாட்டின் நிலைப்பாட்டிற்கான நங்கூரமாக அவர் செயல்பட்டு இருக்கிறார். நீதி வழு வாமல் ஐக்கியத்தின் அடிப்படையில் ஒன்றி ணைக்கும் சக்தியாக அவர் பாடுபட்டு இருக் கிறார் என்றும் அறிக்கையில் வான் அகம்மது தெரி வித்துள்ளார். நாட்டின் 15வது மாமன்னராக 2016 டிசம்பர் 13 முதல் தம்மைத் தேர்ந்தெடுத்த தற்காக மன்னர்களுக்கு மாமன்னர் நன்றி தெரிவித்துக்கொண்டார். பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மதுவுக்கும் மத்திய அரசாங்கத்திற்கும் மாமன்னர் பாராட் டுகளைத் தெரிவித்துக்கொண்டார். தனக்கு ஒத்துழைப்பு நல்கியதற்காக பிரதமருக்கும் மத்திய அரசுக்கும் மாமன்னர் நன்றி கூறினார்.

ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி என்ற முறையில் மாமன்னருக்கும் நாட்டிற்கும் தெரிவிக்கப்பட்டு இருக்கும் விசுவாசம், தியாகங்களை நினைத்து மாமன்னர் பெருமை அடைவதாகவும் அறிக்கை குறிப்பிட்டது.

மலேசியர்கள் தொடர்ந்து ஐக்கியமாக வாழ்ந்துவர வேண்டும். பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். விட்டுக் கொடுத்து நடந்துகொள்ளவேண்டும். இதன் மூலம் சுயாதிபத்திய நாடான மலேசியா, தொடர்ந்து நல்லிணக்கத்தோடும் அமைதி யோடும் செழித்தோங்கும் என்று மாமன்னர் தமது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார். பதவி துறந்துவிட்ட மாமன்னர், தமது சொந்த மாநிலமான கிளந்தானுக்குத் திரும்பி அந்த மாநிலத்தின் அரசாங்கமும் மக்களும் தொடர்ந்து மேம்பட பாடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மலேசியாவின் ஒன்பது மன்னர்களும் தங்களுக்குள் ஒருவரை மாமன்னராக ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக் கிறார்கள். மாமன்னர் பதவி மன்னர்களுக்கு இடையே மாறிமாறி வரும்.

இப்போதைய நாட்டின் 15வது மாமன்னராக முடிசூட்டிக்கொண்ட ஐந்தாம் சுல்தான் முகம் மது இரண்டே ஆண்டுகளில் அந்தப் பதவி யைத் துறந்துவிட்டார். மாமன்னர் பதவி துறப்பதாக சில நாட்களாகவே வதந்திகள் பரவி வந்தன. அது பற்றி தமக்கு உறுதியாக அதிகாரபூர்வ முறையில் எதுவும் தெரியாது என்று பிரதமர் மகாதீர் முகம்மது கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார். மாமன்னர் டிசம்பர் 31 வரை இரண்டு மாத விடுப்பில் சென்றிருந்தார். அப்போது பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா இடைக்கால மாமன்னராகப் பதவி வகித்தார்.

மலேசியாவின் மாமன்னராக 2016 டிசம்பர் 13ஆம் தேதி அரியணை ஏறிய ஐந்தாம் சுல்தான் முகம்மது கிளந்தானைச் சேர்ந்தவர். அவர் தமது மாமன்னர் பதவியை 2019 ஜனவரி 6 முதல் துறந்துவிட்டார். படம்: இபிஏ

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!