அமெரிக்காவில் விபத்து: ஐந்து சிறார்கள் உட்பட 7 பேர் மரணம்

அமெரிக்காவில் விபத்து: ஐந்து சிறார்கள் உட்பட 7 பேர் மரணம்

1 mins read
63dec71c-dd50-416b-9682-a6fbbfca1f3c
-

அமெரிக்காவின் ஃபுளோரிடா வில் கெயின்ஸ்வேல் நகர் அருகே பல வாகனங்கள் மோதிக்கொண்டு தீப்பிடித்ததில் ஏழு பேர் பலியாகிவிட்ட னர். அவர்களில் 10 முதல் 14 வரை வயதுள்ள ஐந்து சிறுவர்களும் அடங்குவர். லூசியானா தேவாலயக் குழு ஒன்றைச் சேர்ந்த அந்தச் சிறார்கள் டிஸ்னி வேல்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துவிட்டது. விபத்து நிகழ்ந்ததும் வாகனங்களில் இருந்த டீசல் தீப்பிடித்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உயிர்பிழைத்த இதர நான்கு சிறார்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அமெரிக்காவில் ஃபுளோரிடா மாகாணத்தில் நெடுஞ்சாலை ஒன்றில் பல வாகனங்கள் மோதி தீப்பிடித்த தில் ஐந்து சிறார்கள் உட்பட ஏழு பேர் மாண்டனர். படம்: இபிஏ