மலேசியா: ஆகாய வழி முடிவில் மாற்றமில்லை

சிங்கப்பூரில் இருக்கும் சிலேத்தார் விமான நிலையத்தில் தரையிறங் கும் எந்த விமானமும் ஜோகூரின் பாசிர் கூடாங் ஆகாய வழியைப் பயன்படுத்தக்கூடாது என்பதே மலேசியாவின் நிலை என்று தெரி விக்கப்பட்டு இருக்கிறது. அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் சாய்புதின் அப்துல்லா, நாளை செவ்வாய்க் கிழமை சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பால கிருஷ்ணனை சந்திக்கும்போது மலேசியாவின் இந்த நிலை அவரிடத்தில் எடுத்துக் கூறப்படும் என்று தெரிவித்துள்ளார். "எங்கள் நிலையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். சிலேத் தாரில் தரையிறங்கும் விமானங் கள், மலேசியாவின் ஆகாய வெளியைப் பயன்படுத்த முடியாது என்பதே எங்கள் நிலை," என்று மலேசிய அமைச்சர் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பில் நாளைய கூட்டத்தில் ஓர் உடன் பாடு ஏற்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். குவாந்தானில் புத்தாண்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறினார். சிலேத்தார் விமானநிலையத்தில் தரையிறங்க வந்த பல இலகு ரக விமானங்களும் இதர விமானங் களும் தரையிறங்குவதற்கு முன் மலேசியாவின் ஆகாய வெளியில் வட்டம் அடித்துக் கொண்டு இருந்ததாக சென்ற வெள்ளிக்கிழமை பெரித்தா ஹரி யானில் வெளியான ஒரு செய்தி தெரிவித்தது. சிலேத்தார் விமானநிலையம், ஜோகூர் பாருவில் இருக்கும் ஜோகூர் துறைமுகத்தை நோக்கிய படி ஜோகூர் நீரிணைக்கு அருகே அமைந்திருக்கிறது.

அந்த விமானநிலையத்தைச் சரக்கு மற்றும் தனியார் விமா னங்களே பெரிதும் பயன்படுத்து கின்றன. சிலேத்தார் விமான நிலையத் தில் இறங்குவதற்கு முன்பாக பல விமானங்களும் இலகுரக விமா னங்களும் ஜோகூர் துறைமுகத் திற்கு அருகே ஆகாய வெளியில் நுழைந்து பிறகு வட்டப்பாதையில் பறந்து வந்து தரையிறங்கியதாக அந்த மலாய் மொழி நாளேடு தெரி வித்தது. சிலேத்தார் விமான நிலையத் தில் நடப்புக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ள விமான இறங்கு முறையை சிங்கப்பூர் மீட்டுக் கொள்ளவேண்டும் அல்லது விமானம் பறந்து வரும் பாதையை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று மலேசியா விரும்புகிறது. இதனிடையே, பாசிர் கூடாங் ஆகாய வெளி பிரச்சினையை மலேசிய பிரதமர் மகாதீர் முகம்ம திடம் கொண்டு செல்லப்போவதாக ஜோகூர் தெரிவித்துள்ளது. அந்த விவகாரம் தொடர்பில் ஏற்புடைய அதிகாரிகளிடம் உட னடியாக பேசி சிறந்த முறையிலும் பரவலான முறையிலும் அது பற்றி தெரிந்து கொள்ளப்போவதாகவும் ஜோகூர் முதல்வர் டத்தோ ஒஸ் மான் சாபியான் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!