பிரேசிலில் தொடர் தாக்குதல்: 300 வீரர்கள் குவிப்பு

பிரேசிலில் தொடர் தாக்குதல்: 300 வீரர்கள் குவிப்பு

2 mins read
e767a5a7-b545-48fc-9d41-a8320636556b
-

ரியோ டி ஜெனிரோ: பிரேசிலின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஃபோர்டலிசா நகரில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்திருப் பதைத் தொடர்ந்து அங்கு 300 வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். அந்நகரில் உள்ள கடைகள், வங்கிகள் மற்றும் பேருந்துகள் தாக்கப்பட்டு வருவதால் வன்முறைத் தாக்குதல்களை தடுத்து நிறுத்த ராணுவ வீரர்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுற்றுக்காவல் பணி களில் ஈடுபடுவர் என்றும் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். இந்த வாரத்தில் மட்டும் சியரா மாநிலத்தில் தொடர் தாக்குதல் கள் அதிகரித்திருப்பதால் கூடு தலாக 300 வீரர்களை அனுப்ப நீதித்துறை அமைச்சு உத்தரவிட் டுள்ளதாகத் தெரிகிறது. பிரேசிலில் உள்ள சிறைச்சாலை களில் கடுமையான புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. அங்குள்ள பெரும் பாலான சிறைச்சாலைகள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் கும்பல்கள் கட்டுப்பாட்டில் உள் ளன. சிறைச்சாலைகளுக்குள் கைத்தொலைபேசி சமிக்ஞை களுக்கு சிறைச்சாலை அதிகாரி கள் தடை விதித்துள்ளனர்.

பிரேசில் அதிபராக ஜெய்ர் போல்சொனாரே பதவி ஏற்ற ஒரு சில நாட்களில் குற்றச்செயல் களை முறியடிக்க கூடுதல் வீரர்கள் அப்பகுதிக்கு அனுப்பப் பட்டுள்ளனர். சியரா மாநிலத்தில் நீடிக்கும் வன்முறைச் சம்பவங் களை முடிவுக்குக் கொண்டுவர கூடுதல் வீரர்களை அனுப்ப நீதித்துறை அமைச்சர் செர்ஜியோ மோரோ எடுத்த முடிவை அதிபர் பாராட்டினார். வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 50 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள் ளதாக அதிகாரிகள் கூறினர். பிரேசிலில் நீடிக்கும் வன்முறைத் தாக்குதல்களை முறி யடிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிபர் உறுதியளித்துள்ளார்.